/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'மதவாதி முத்திரை குத்திடுறாங்களே!'
/
'மதவாதி முத்திரை குத்திடுறாங்களே!'
PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பழனியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பழனி அடிவார பகுதியில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சந்தை அமைத்து தர வேண்டும். இது தொடர்பாக, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடும்பத்தில் மூன்று, நான்கு பேர் கொல்லப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசுபவர்கள், 2026க்கு பின் காணாமல் போவர். ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது மத கலவரத்தை துாண்டுவது அல்ல' என்றார்.
ஹிந்து முன்னணி தொண்டர் ஒருவர், 'ஹிந்துக் களுக்கு ஆதரவாக பேசினாலே, மதவாதின்னு தி.மு.க., தரப்பினர் முத்திரை குத்திடுறாங்களே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.