Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 02, 2026 01:51 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 02, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 1,728 நாட்களில், 4,000 கும்பாபிஷேகங்கள் செய்துள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசினார். கும்பாபி ஷேகங்கள் அனைத்தும் பக்தர்களின் காணிக்கையால் மட்டுமே நடக்கிறதே தவிர, அரசு சார்பில் எந்த தொகை யும் செலவிடுவதில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கோவில்களின் மேம்பாட்டுக்கு அரசு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்' என்று கூறினர். ஆட்சியே முடிய போகிறது. இன்னும் நிதி ஒதுக்கவில்லை!

'தி.மு.க., நிறைவேற்றாமல் விட்ட சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள், 373' என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று என, எடுத்துக் கொள்ளலாம்.

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர், டாக்டர் சரவணன் பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில், 1,000க்கும் மேற்பட்ட, ' டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், 500 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு, 1,000க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த, 57 மாத ஆட்சியில், ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் மது விற்பனையை இலக்காக வைத்து, தி.மு.க., அரசு செயல்படுகிறது. இது தான் உண்மையான மது ஒழிப்பா என்பதற்கு, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பதிலளிக்க வேண்டும்.

'டாஸ்மாக் மது கடைகளால், தமிழகத்தில் விதவைகள் அதிகமாகிறாங்க'ன்னு, அ.தி.மு.க., ஆட்சியை குற்றம்சாட்டிய கனிமொழி இதற்கு என்ன பதில் தருவாங்க?



த மிழக பா.ஜ., பொதுச்செயலர், ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டத்திற்கு, பிரதமர் மோடி, 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதுவரை, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 5 லட்சம் பேருக்கு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பாரம்பரிய கலைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களின் சுயதொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் தான், தமிழக விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

இந்த திட்டத்தை எதிர்க்கும், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு கூட, விஸ்வகர்மா பிரிவினரில், 30 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க பதிவு செய்திருப்பது தெரியுமா?



ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: தி.மு.க.,வுக்கும், காங்., கட்சிக்கும் நெருடல் இருப்பது போல் தோன்றும். ஆனால், அது நீரில் கிழித்த கோடு போல மறைந்து போகும். மோடி உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள், அ.தி.மு.க.,வை எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அவற்றை சகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் பழனிசாமி, கனிமொழி - ராகுல் சந்திப்பு பற்றி பேச தகுதியற்றவர்.

அ.தி.மு.க.,வினரை பார்த்து, இவரே, 'கமென்ட்' அடிக்கிறப்ப, 'பப்பு'வைப் பார்த்து, பழனிசாமி, 'கமென்ட்' அடிக்கக் கூடாதா என்ன!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap