Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 13, 2026 01:35 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 13, 2026 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: 'திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தர்காவில் வழிபாடு நடத்துவதற்கு ரம்ஜான், பக்ரீத் நாட்கள் தவிர மற்ற நாட்கள் தடை விதிப்பது' என்ற சென்னை உயர் நீதிமன்ற முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

குறிப்பிட்ட வழிபாட்டு இடம் என்பது எல்லா காலத்திலும் வழிபாட்டுக்கான இடம் தான். சில பண்டிகைகளில் மட்டும் அங்கே வழிபடலாம் என, உத்தரவிடுவதும், கட்டுப்பாடுகள் போடுவதும் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல், முருக பக்தர்களை அரசு இயந்திரம் தடுத்தப்ப, இந்த மதச்சார்பின்மைவாதி எங்க போயிருந்தாராம்?

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: டி.என்.பி.எஸ்.சி., யின் குளறுபடியால், 9,000 இளைஞர்களின் வாழ்க்கையை நசுக்கிவிட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் தி.மு.க., வின் அரசியல் நாடகம். இந்த குளறுபடி, இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம். வாழ்க்கை போராட்டத்திற்கு விடிவுகாலம் வேண்டும் என, கடுமையாக தயாரித்து தேர்வுக்கு வந்தால், தேர்வு எழுதுவதே போராட்டமாக இருப்பது வேதனையிலும் வேதனை.

சரி... 'இன்னும் நல்லா படிக்க அவகாசம் கிடைச்சிருக்கு' என, 'பாசிட்டிவ்'வா இதை எடுத்துக்கிட்டு, தேர்வுக்கு இளைஞர்கள் தயாராகணும்! தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் சக்திவேல் பேச்சு: தமிழகம் முழுதும் அரசு புறம்போக்கு நிலங்களில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் வகையில், அவர்களை அப்புறப் படுத்தும் பணிகளை அரசு தொடரக் கூடாது. இந்த மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மாற்று இடத்திற்கான ஒரு கொள்கையை அரசு வெளியிட வேண்டும்.

அவங்களை மாற்று இடத்தில் குடி வச்சதும், புதிய ஆட்கள் வந்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிச்சிடுவாங்களே!

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' என, முதல்வர் ஸ்டாலின் தினமும் சொல்லி வருகிறார். 'டாஸ்மாக்' கடைக்கு முன்னாடி தமிழன் தலைகுப்புற விழுந்து கிடக்கிறான். தமிழகம் மது சார்ந்த இறப்புகளில் முன்னணியில் உள்ளது. குற்றச் செயல்களில், 'குடி'மகன்கள் ஈடு பட்டு தமிழகத்தை தலைகுனிய வைத்து வருகின்றனர். இதுதான் தி.மு.க., ஆட்சியின் சாதனையா?

'டாஸ்மாக்' மது விற்பனை நீடித்தால், அடுத்த, 50 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை அதலபாதாளத்துக்கு போயிடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap