தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு:

எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒருவர் அரசியல் களத்தில் உள்ளார். அவருடன் அரசியல் களத்தில் துணை நிற்க விரும்புகிறேன். பணம் சம்பாதிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ நான் அரசியலுக்கு வரவில்லை. நான் மிகவும் நம்பும் அவர், சமுதாயத்திற்காக உழைக்க வந்துள்ளார்; அவருக்கு துணை நிற்கவே அரசியலுக்கு வருகிறேன்.

காஞ்சனா பெயர்ல வரிசையா படங்கள் எடுத்து, 'கல்லா' கட்டிட்டு இருந்த உங்களது பொது தொண்டு ஆசையை நினைச்சா புல்லரிக்குது... அதே நேரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால், உங்களுக்கெல்லாம் அரசியல் ஆசை வந்திருக்குமா என்ற சந்தேகமும் வருது!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா எம்.எல்.ஏ., அறிக்கை:


கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் வாடி, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும், வேதனையையும் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவங்களது கூட்டணி கட்சியான கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அலங்கோலமான நிர்வாகம் தான், இன்றைய மின்வெட்டு பிரச்னைக்கு காரணம் என்பது இவங்களுக்கு தெரியாதா?

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:


'இன்ஸ்டாகிராம்'ல, 'ரீல்ஸ்' போட்டு ஆட்சிக்கு வந்த மாதிரி, ஆட்சியை தொடரலாம், மக்களை ஏமாத்தலாம்னு நினைச்சா, வடிவேலு நடிச்ச இம்சை அரசன் 23ம் புலிகேசி மாதிரி, வருங்காலத்துல உங்க ஆட்சியை, 'இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆட்சி'ன்னு சொல்ல வச்சிடாதீங்க முதல்வர் சார்.

இவரது விமர்சனம் ஒருபக்கம் இருக்கட்டும்... அரசியல் தலைவர்களை, 'சார்' போட்டு மரியாதையாக பேசும் புதிய நடைமுறையை கொண்டு வந்த முதல்வர் விஜயை பாராட்டியே ஆகணும்!

வி.சி.க.,வை சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேட்டி:


எங்கள் கட்சி வலிமையான கொள்கை, கோட்பாட்டோடு இயங்குகிற இயக்கம். 'ஜெயிலுக்கு போறவங்க வாங்க; எம்.எல்.ஏ., ஆகணும், எம்.பி., ஆகணும்னு வர்றவங்க இந்த இயக்கத்துக்கு வர வேண்டாம்' என்று கூறியவர் திருமாவளவன். ஆதாயத்திற்காக, பதவி சுகத்துக்காக மாற்று கட்சிக்கு போகும் பனையூர் பாபு போன்றவர்களை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

'பதவிக்காக யாரும் இந்த இயக்கத்துக்கு வரவேண்டாம்' என சொல்லும் நீங்களும், உங்க தலைவருமே பதவிகள்ல இருந்துட்டு தானே இதை சொல்றீங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us