/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ராம்நகர் நடுரோட்டில் குத்த காத்திருக்கிறது கம்பி; எப்படித்தான் வாகனம் இயக்குவது மாநகராட்சியை நம்பி?
/
ராம்நகர் நடுரோட்டில் குத்த காத்திருக்கிறது கம்பி; எப்படித்தான் வாகனம் இயக்குவது மாநகராட்சியை நம்பி?
ராம்நகர் நடுரோட்டில் குத்த காத்திருக்கிறது கம்பி; எப்படித்தான் வாகனம் இயக்குவது மாநகராட்சியை நம்பி?
ராம்நகர் நடுரோட்டில் குத்த காத்திருக்கிறது கம்பி; எப்படித்தான் வாகனம் இயக்குவது மாநகராட்சியை நம்பி?
ADDED : ஜூன் 16, 2025 09:15 PM

குப்பை சேகரிக்க ஆளில்லை
குனியமுத்துார், 87வது வார்டு, அம்மன் கோவில் ரோடு பகுதியில், வீடுகளுக்கு சென்று முறையாக குப்பை சேகரிக்கப்படுவதில்லை. இதனால், குடியிருப்புவாசிகள் பிளாஸ்டிக் பைகளில் மூட்டையாக கட்டி, குப்பையை வீசிச்செல்கின்றனர். சாலையோரம் அதிகளவு குப்பை தேங்கிக்கிடக்கிறது.
- ரஹ்மத், குனியமுத்துார்.
புதரில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்
ராமநாதபுரம், ரெட் பீல்ட்ஸ், ரேஸ்கேர்ஸ் ரோட்டில், நிர்மலா பள்ளி வளாகம் அருகே, சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. கம்பம் விழுந்தால் உயிர்ச்சேதம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கம்பத்தை, விபத்து நடப்பதற்கு முன் அகற்ற வேண்டும்.
- ராஜா, ராமநாதபுரம்.
சாலை நடுவே கம்பி
ராம்நகர், 67வது வார்டு, சாஸ்திரி ரோட்டின் நடுவே வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதில், சாலை நடுவே கம்பி ஒன்று நீட்டியபடி உள்ளது. வாகனஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்திற்கு காரணமாகவும் உள்ள இந்த கம்பியை அகற்ற வேண்டும்.
- ஸ்ரீநிவாசன், ராம்நகர்.
திறந்தவெளியில் கழிவுநீர்
கவுண்டம்பாளையம், 16வது வார்டு, சரவணன் நகரில் அபார்ட்மென்டில் இருந்து கழிவுநீர் திறந்தவெளியில் வெளியேற்றப்படுகிறது. சாலையில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் பரவி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- சாகர், சரவணன் நகர்.
வழுக்கி விழுகிறோம்
வெள்ளலுார், இடையர்பாளையம், ஸ்ரீ கார்டன் பகுதியில், மண் சாலையை மழைக்காலத்தில் பயன்படுத்த முடியவில்லை. சேறும், சகதியுமான சாலையில் வண்டிகள் மாட்டிக்கொள்கின்றன. பொதுமக்கள் வழுக்கி விழுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக புதிய தார் சாலை அமைக்க கோரியும் நடவடிக்கையில்லை.
- குகன், வெள்ளலுார்.
மூடியில்லா சாக்கடை
ரத்தினபுரி, 31வது வார்டு, சாதிக்பாட்ஷா வீதியில், சாக்கடை மூடிபோடாமல்திறந்தநிலையில் உள்ளது. குழந்தைகள் விழும் வகையில் அபாயகரமானதாக உள்ளது. கடந்த இரண்டு மாதமாக புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- சம்பத்குமார், ரத்தினபுரி.
பழுதடைந்த கம்பம்
கோவை தெற்கு மண்டலம், 94வது வார்டு, அன்னை இந்திரா நகர், 'எஸ்.பி -33, பி-9' மற்றும் அருகிலுள்ள கம்பம் இரண்டும் பழுதடைந்துள்ளன. கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. சாலையில் சாய்வது போல் உள்ள கம்பத்தை, உடனடியாக மாற்ற வேண்டும்.
- சங்கவி, தெற்கு மண்டலம்.
குடியிருப்புவாசிகள் சிரமம்
போத்தனுார், 98வது வார்டு, இ.பி., காலனி பகுதியில் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பழுதான சாலைகளை சரிசெய்து தர வேண்டும். கழிவுநீர் இணைப்பு பணிகள் நிறைவு பெறாததாலும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சாமுவேல், போத்தனுார்.
பள்ளங்களால் விபத்து
தெலுங்குபாளையம், பனைமரத்துார் மெயின் ரோடு, சூர்யா கெமிக்கல் கம்பெனி அருகே முழுச்சாலை அளவிற்கும் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. பெரிய வண்டிகள் தட்டுத்தடுமாறி செல்கையில், பைக்கில் செல்வோர் விழுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
- கார்த்திக், தெலுங்குபாளையம்.
இருளால் அச்சம்
மேற்கு மண்டலம், 39வது வார்டு, மருதம் நகர் முதல் வீதியில், ' எஸ்பி- 19 பி- 22' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
கழிவுகளால் துர்நாற்றம்
டவுன்ஹால், கோவை கோனியம்மன் கோவில் முன்புறம் சாலையில் அதிகளவு குப்பை கொட்டப்படுகிறது. சாலையில் பறக்கும் குப்பை, வாகனஓட்டிகள் மீது விழுகிறது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், குப்பையை அகற்ற வேண்டும்.
- வின்சென்ட் ராஜ், திருப்பூர்.
எரியா விளக்குகள்
கோவை மாநகராட்சி, 82வது வார்டு, திருமலை நகர் பகுதியில், 'எஸ்.பி -47, பி -6' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. மழைக்காலத்தில், சீக்கிரமே இருட்டி விடும் நிலையில், தெருவிளக்கு இல்லாமல் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர்.
- முகமத், திருமலைநகர்.