/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
வேடப்பட்டி - பேரூர் சாலை முழுவதும் பள்ளம்; தினமும் விபத்து நடப்பதால் பதறுகிறது காண்போர் உள்ளம்
/
வேடப்பட்டி - பேரூர் சாலை முழுவதும் பள்ளம்; தினமும் விபத்து நடப்பதால் பதறுகிறது காண்போர் உள்ளம்
வேடப்பட்டி - பேரூர் சாலை முழுவதும் பள்ளம்; தினமும் விபத்து நடப்பதால் பதறுகிறது காண்போர் உள்ளம்
வேடப்பட்டி - பேரூர் சாலை முழுவதும் பள்ளம்; தினமும் விபத்து நடப்பதால் பதறுகிறது காண்போர் உள்ளம்
ADDED : ஜூன் 15, 2025 11:09 PM

சாக்கடை அடைப்பு
வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட், இரண்டாவது வார்டு, பேஸ் - 1 முதல் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில், உணவு கழிவு மற்றும் பிற கழிவு தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிகளவிலான கழிவு சாக்கடையில் கொட்டுவோர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- ஜான்சி, வெள்ளக்கிணறு.
பள்ளி அருகே நாறும் குப்பை
கவுண்டம்பாளையம், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அருகே, சாலையோரம் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. பெருமளவு தேங்கியுள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வகுப்பறை வரையிலும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
- தமிழரசி, கவுண்டம்பாளையம்.
அடிக்கடி மின்வெட்டு
ஜி.என்.மில்ஸ் பகுதி, எஸ்.எம்.ஆர்., லே-அவுட் பகுதியில் கடந்த ஒரு மாதமாக, மின்சாரம் சரிவர வழங்கப்படுவதில்லை. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. உயர் அழுத்தம், குறைந்த அழுத்த மின்சாரம் என மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால், மின்னணு சாதனங்கள் பழுது அடைகின்றன.
- கீர்த்திகா, ஜி.என்.மில்ஸ்.
தெருவிளக்கு பழுது
புலியகுளம், 64வது வார்டு, பெரியார் நகரில், ' எஸ்.பி -4 பி-2' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. பல மாதங்களாக தெருவிளக்கு எரியாதது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை. இரவு, 7:00 மணிக்கு மேல் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- சுகுமாறன், புலியகுளம்.
சேதமடைந்த ரோடு
வேடபட்டியில் இருந்து பேரூர் செல்லும் சாலை, மோசமாக சேதமடைந்துள்ளது. குழிகளால் சாலையில் இடதுபுறம் செல்ல வேண்டிய வாகனங்கள், வலதுபுறம் வரை வந்து செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. முக்கியமாக இரவில் தெருவிளக்கு இல்லாததால், இச்சாலை மிகவும் அபாயகரமானதாக மாறிவிட்டது.
- உண்ணிகிருஷ்ணன், வேடபட்டி.
எரியா விளக்குகள்
சரவணம்பட்டி, முருகன் நகர் ஒன்றாவது பகுதியில் கடந்த 15 நாட்களாக, மூன்று கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. விளக்குகளை ஆன் செய்வதற்கான சுவிட்ச் பாக்சும் கழன்று கீழே தொங்கிக் கொண்டுள்ளது. சரிசெய்து விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சவுந்தரராஜன், அன்பு நகர்.
சீரமைக்காத ரோடு
வடவள்ளி, ஸ்ரீராம் அவென்யூ பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை பணிகள் நடந்தது. பணிகள் முடிந்த பின்பு சாலையை முறையாக சீரமைத்து, தார் சாலை அமைக்கவில்லை. மண் சாலையாகவும், சாலை முழுவதும் குழிகளாகவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
- ஹேமா, வடவள்ளி.
விபத்தை தவிர்க்க வேகத்தடை வேண்டும்
வடவள்ளி - கணுவாய் சாலையில் இருந்த வேகத்தடைகள், எந்த காரணமுமின்றி திடீரென அகற்றப்பட்டன. இதனால், கடந்த 25 நாட்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரித்துள்ளது. இரு வேறு விபத்து சம்பவங்களில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரசேகர், வடவள்ளி.
மீண்டும் உடைந்த குடிநீர் குழாய்
வெள்ளக்கிணறு, கால்நடை மருத்துவமனை அருகே அத்திக்கடவு குடிநீர் குழாய் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாகிறது. புகாருக்கு பின் சரிசெய்யப்பட்ட இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து. தண்ணீர் ஆறாய் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- குமார், வெள்ளக்கிணறு.
அடிக்கடி விபத்து
கோவில்மேடு முதல் சாய்பாபா காலனி இணைப்புச்சாலையில், 10க்கும் மேற்பட்ட குழிகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையே உள்ளது. பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்வோர் வாகனஓட்டிகள் பாதிப்படைகின்றனர். மோசமான சாலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
- ராகுல், சாய்பாபா காலனி.
கம்பத்தை இடமாற்றணும்
சின்ன மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு, 111 தடம் எண் பேருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தினமும் காலை, மாலை வேளையில் வருகிறது. இவ்வழியில் மிகவும் குறுகிய வளைவில் திரும்பும்போது, சாலையில் உள்ள மின்கம்பம் இடையூறாக உள்ளது. கம்பத்தை பாதுகாப்பாக இடம் மாற்ற வேண்டும்.
- கார்த்திக், சின்னமேட்டுப்பாளையம்.