sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

வீணாகும் தண்ணீர்... நிறம் மாறிய தண்ணீர்! கண்ணீர் விடும் மக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

/

வீணாகும் தண்ணீர்... நிறம் மாறிய தண்ணீர்! கண்ணீர் விடும் மக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

வீணாகும் தண்ணீர்... நிறம் மாறிய தண்ணீர்! கண்ணீர் விடும் மக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

வீணாகும் தண்ணீர்... நிறம் மாறிய தண்ணீர்! கண்ணீர் விடும் மக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்


ADDED : மே 13, 2025 11:44 PM

Google News

ADDED : மே 13, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இடையூறு' பிளக்ஸ்

திருப்பூர் - பல்லடம் ரோடு, மகாலட்சுமிநகரில் வளைவில் வாகனங்கள் செல்வது தெரியாத வகையில் இடையூறாக பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. பிளக்ஸை அகற்ற வேண்டும்.

- வெங்கடேஸ்வரன், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)

வழிந்தோடாத மழைநீர்

ஊத்துக்குளி, காங்கயம் பாளையத்தில் மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேற வழியில்லாமல் உள்ளது. மழைநீர் வழிந்தோட வழி ஏற்படுத்த வேண்டும்.

- கார்த்தி, ஊத்துக்குளி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

1. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)

2. திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் வளைவில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகி வருகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- சக்திபிரியா, கருவம்பாளையம். (படம் உண்டு)

3. திருப்பூர், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.

- குழந்தைவடிவேல், அமர்ஜோதி கார்டன். (படம் உண்டு)

நிறம் மாறிய தண்ணீர்

திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் ரோடு, பொங்குபாளையம் ஊராட்சி குட்டை கரையில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. தண்ணீர் நிறம் மாறி சுகாதாரக்கேடாக உள்ளது.

- சுப்ரமணியம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)

குழியால் கிலி

திருப்பூர், 30வது வார்டு, லட்சுமி நகர் முதல் வீதியில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, பணி நடைபெறாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது.

- ஸ்ரீவிஷ்ணு, லட்சுமி நகர். (படம் உண்டு)

எரியாத விளக்குகள்

திருப்பூர், ஹார்விரோடு, தேவாங்கபுரம் சந்து ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நான்கு தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.

- கிருஷ்ணமூர்த்தி, தேவாங்கபுரம். (படம் உண்டு)

முட்புதர் அகலுமா?

திருப்பூர், 9வது வார்டு, அங்கேரிபாளையம், சம்பூர்ணா நகரில் ரோட்டில் புதர்மண்டி இருப்பதால், ஊர்வன நடமாட்டம் அதிகமாக உள்ளது. பாம்புகள் வீடுகளுக்கு புகுந்து விடும் நிலை உள்ளது.

- சிவக்குமார், சம்பூர்ணா நகர். (படம் உண்டு)

சுகாதாரச் சீர்கேடு

திருப்பூர், கே.செட்டிபாளையம், மகாலட்சுமி நகரில் ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை கொட்ட தொட்டி வைக்க வேண்டும்.

- சங்கர்சதீஷ், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)

சீராகாத சாலை

திருப்பூர், தாராபுரம் ரோடு, வெங்கடேஸ்வரா நகரில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.

- மனோகரன், வெங்கடேஸ்வராநகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தெருவிளக்கு 'பளிச்'

திருப்பூர், லட்சுமிநகர், முல்லை வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. எரியாத விளக்குகள் சரிசெய்யப்பட்டு, புதிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

- மணிகண்டன், முல்லை வீதி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us