/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
/
கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM
உத்திரமேரூர்:தளவராம்பூண்டியில் கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் கலைச்செல்வியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், தளவராம்பூண்டி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சிறப்பு கால்நடை முகாம் நேற்று நடந்தது.
அப்போது விவசாயிகள் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் வைத்த கோரிக்கை விவரம்:
தளவாரம்பூண்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில், இரண்டு மாதமாக, ஐந்து ஆடுகள் மற்றும் ஏழு ஆடுகள் மர்ம நோயால் இறந்து உள்ளது.
நோய் வாய்ப்பட்ட மாடு மற்றும் ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவைகள் பிழைக்காமல் இறந்து வருகின்றன. மேலும், ஆடுகளுக்கு தலையில் கட்டியும், வாயில் புண்ணும் அதிகரித்து வருகிறது.
எனவே, தளவராம்பூண்டி கிராமத்தில் கால்நடைகள் மர்ம நோயால் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கலெக்டர் கலைச்செல்வி மர்ம நோயால் கால்நடைகள் இறப்பதை தடுக்க, உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கால்நடை பராமரிப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.