சுபன்ஷு சுக்லா;விண்வெளியில் ஒளிரும் இந்திய நட்சத்திரம்.
சுபன்ஷு சுக்லா;விண்வெளியில் ஒளிரும் இந்திய நட்சத்திரம்.
PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

சுபன்ஷு சுக்லா
இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் ஒரு சாதனை இந்தியரின் பெயர்.
ஆக்சிம் ஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவின் கென்னடி விண்வெளித்தளத்தில் இருந்து பறந்து கொண்டிருக்கிறார்.இவருடன் அமெரிக்கா,இஸ்ரேல்,மற்றும் ஜப்பான் நாட்டு விண்வெளி வீரர்களும் பயணிக்கின்றனர்.
இவர் ராக்கெட்டில் பறப்பதை டி.வி.,யின் நேரலையில் பார்த்த பெற்றோர் ஆஷா சுக்லா-ஷம்பு தயாள் சுக்லா ஆகியோர் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக சென்று வா மகனே சென்று வா வென்று வா மகனே வென்று வா என்று மனதார பிரார்த்தித்து வாழ்த்தி வழியனுப்பினர்.
சுபன்ஷு சுக்லா, உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே விண்வெளி விஞ்ஞானத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர், இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ககன்யான் திட்டம் வழியாக சீரான பயிற்சிகளைப் பெற்றவர்.
ஆனாலும் தனது விண்வெளி வேட்கையை நிறுத்திக் கொள்ளாமல் அமெரிக்கா சென்று அங்குள்ள தனியார் விண்வெளி நிறுவனத்தில் சேர்ந்து விண்வெளியில் பறந்து சென்று ஆராய்ச்சி செய்ய தன்னை தயார் செய்துகொண்டார்,அது அவ்வளவு எளிதானது அல்ல கடுமையான பயிற்சிகள் உடல் தேர்வுகள் இருந்தன.அவை அனைத்தையும் தகர்த்து விண்வெளிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இது அவரின் முதல் விண்வெளிப் பயணம் இவருக்கு முன் ராகேஷ் ஷர்மா 41 வருடங்களுக்கு முன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு இந்தியர்கள் விண்வெளிக்கு செல்லலாம் என்று வழியைத் திறந்துவிட்டவர் அவர் இந்திய-சோவியத் நட்புறவு காரணமாக நாட்டின் சார்பாக பறந்து சென்றார்.
அதற்கு பிறகு சுபன்ஷு சுக்லா இப்போதுதான் பறக்கிறார் இவர் முழுக்க முழுக்க தனது முயற்சியால் இந்த சாதனையை தொட்டுள்ளார்.இவது சாதனை மூலம் விண்வெளிக் கனவு உள்ள யாரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சுபன்ஷு சுக்லாவின் பயணம், இந்திய இளைஞர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தை உருவாக்கும். அவரது சாதனை, நாட்டின் விண்வெளிப் பொறியியலுக்கு ஒரு பெரும் முன்னேற்றமாகும்.இவர் வெற்றிகரமாக திரும்பிவந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பது நிச்சயம்.
அந்நாள் இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்.
-எல்.முருகராஜ்