PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

பெண்களின் மாதவிடாய் என்பது புனிதமே என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவே அம்பாசி திருவிழா
அசாம் மாநிலம் குவாஹட்டியில் அமைந்துள்ள காமாக்யா கோவிலில் தற்போது இந்த விழா நடந்துவருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதிக்குள்ளான அமாவாசை நாட்களில் நடைபெறுகிறது.
இந்த நாள்களில், கோவில் மூடப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படும்,நான்காவது நாட்கள் கோவில் திறக்கப்படும்போது துறவியர்,பெண்கள்,இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கூடிவழிபடுவர்.இன்று நான்காவது நாள்.
-எல்.முருகராஜ்