/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதியவரிடம் மொபைல் போன் பறித்த நபர் கைது
/
முதியவரிடம் மொபைல் போன் பறித்த நபர் கைது
PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், முதியவரிடம் மொபைல் போன் பறித்து சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலிகிராமம் கே.கே., சாலையை சேர்ந்தவர் வெங்கட் சுப்பிரமணியன், 69. இவர், நேற்று முன்தினம் ரயில் வாயிலாக ஜோலார்பேட்டை சென்றார்.
பின், அங்கிருந்து நேற்று நள்ளிரவு கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்து இறங்கினார். பின், வீட்டிற்கு செல்ல ஆன்லைன் வாயிலாக பைக் பதிவு செய்து விட்டு, ரயில்வே பாடர் சாலையில் வாகனத்திற்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் அவரது மொபைல் போனை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரையடுத்து கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.