PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டில், வார்டு சபை கூட்டம் நடந்தது.
கவுன்சிலர் சிவராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பகுதி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழக அரசின் சமீபத்திய சுற்றறிக்கையையொட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இதில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 8வது வார்டு, ரோடுகளில், சாக்கடை மறு சீரமைப்புகள் தொடர்பாகவும், சாக்கடைகளை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து, பொது சுகாதாரத்தை காப்பது, பிரதான சாலைகளில் குப்பைகளை கொட்டி வைப்பதை பேரூராட்சி நிர்வாகம் கைவிடக் கோரியும், சாலைகளில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பங்கேற்ற அலுவலர்கள், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

