நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. ஆயர்களும், பசுக்கூட்டங்களும் தன்னால் தான் வளமுடன் வாழ்கிறார்கள் எனக் கருதினான். அவனுக்கு பாடம் புகட்ட கிருஷ்ணர் விரும்பினார்.
''இந்திரனைக் கைவிட்டு நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் கோவர்த்தன மலையை வழிபடுவோம்'' என்றார். இதையறிந்த இந்திரன் தொடர்ந்து ஏழுநாள் மழை பெய்யச் செய்தான். பசுக்கள், ஆயர்களை காக்க கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார் கிருஷ்ணர்.
இதை நினைவு கூரும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் கிருஷ்ணருக்கு விருந்து படைக்கும் அன்னகூட் உற்ஸவம், கோவர்த்தன பூஜை நடக்கும். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.