
என் வயது, 52; புதுச்சேரி அரசு பணியாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழை குடும்பத்தில் அனைவரும் பல ஆண்டுகளாக படித்து மகிழ்கிறோம். இளமைக்கால பள்ளி பருவ அனுபவத்தை பகிரும், 'ஸ்கூல் கேம்பஸ்' சிறுவர், சிறுமியருக்கு மட்டுமின்றி பெரியோருக்கும் அறிவையும், மகிழ்ச்சியையும் வழங்குகிறது.
உடல்நலம் காக்கும், 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்' பகுதி உணவு செய்முறை அடிப்படையில் பிள்ளைகளுக்கு தயாரித்து கொடுத்து மகிழ்கிறேன். குழந்தைகளுக்கு வரையும் பயிற்சி அளிக்க, 'உங்கள் பக்கம்' பகுதி ஓவியங்கள் உதவுகின்றன. சிறுகதை, அதிமேதாவி அங்குராசுவின் கட்டுரைகள், இளஸ் மனஸ், படக்கதை என அனைத்து பகுதிகளும் சுவாரசியமாக உள்ளன.
எல்லா வயதினரையும் வசப்படுத்தியுள்ளது, சிறுவர்மலர் இதழ். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சிறுவர்மலர் சேவை என்றென்றும் தொடர மனதார வாழ்த்துகிறேன்.
- எம்.கண்ணன், புதுச்சேரி.