
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பிரண்டை நறுக்கியது - 2 கப்
ஜவ்வரிசி - 500 கிராம்
சீரகம் -
2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 3
பச்சை மிளகாய்- 10
எண்ணெய், உப்பு, சமையல்
சோடா, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை, 10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரில் காய்ச்சவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பிரண்டையை வதக்கவும். ஆறியதும் அரைத்து, காய்ச்சிய ஜவ்வரிசியுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சமையல் சோடா சேர்த்து கிளறி ஆறவிடவும்.
வெயிலில் சுத்தமான பருத்தி துணியை விரித்து ஆறிய கலவையை சிறிது சிறிதாக ஊற்றி காய வைக்கவும். நலம் தரும், 'பிரண்டை வடகம்!' தயார். எண்ணெயில் பொரித்து மதிய உணவுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
- ஜனா பாலமுருகன், திருப்பூர்.
தொடர்புக்கு: 85259 61245