
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூண்டு அதிக அளவில் உரிப்பது கஷ்டம். அடுப்பில் வாணலியை வைத்து, காய்ந்ததும், உரிக்க வேண்டிய பூண்டை அதில் போட்டால், படபடவென்று வெடித்து தோல் எல்லாம் சிதறும். பிறகு பூண்டை உரிப்பது சுலபம்
* சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால், ஒரு மாதம் ஆனாலும் முளை வராமலும், கெடாமலும் இருக்கும்
* சமையலறை அலமாரி அல்லது பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், பிளாஸ்டிக் மற்றும் உலோக சாமான்களின் மேல், எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை திரும்பவும் எடுத்து பயன்படுத்தும் போது, சிறிது சமையல் சோடாவுடன் தண்ணீர் கலந்து, பஞ்சு அல்லது துணியால் துடைத்தால், பிசுக்கு அகன்று பளிச்சென்று ஆகிவிடும்.