
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 1960ல், அமெரிக்கா செய்த பெரும் தவறு இன்று, கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பழைய டயர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, யாரோ கூறிய யோசனையை கேட்டு, அவற்றை கடலில் போட்டனர்.
இப்படி போடப்பட்ட, 20 லட்சம் டயர்கள், கடலுக்குள் பெரும் மாசை ஏற்படுத்தியது. டயர் ஒன்று ஓரளவுக்கு அழிய, 50 முதல் 80 ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால், 20 லட்சம் டயர்களை எப்படி அழிப்பது? வேறு வழியின்றி கடலில் தள்ளிய டயர்களை மீண்டும் வெளியே எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது, அவ்வளவு எளிதானது அல்ல என, உணர்ந்து கவலையில் உள்ளனர்.
ஜோல்னாபையன்