/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருகக்கு மருந்து - வலி நிவாரண உணவுகள்!
/
நம்மிடமே இருகக்கு மருந்து - வலி நிவாரண உணவுகள்!
PUBLISHED ON : ஏப் 28, 2024

ஆற்றல்களைத் தரும் உணவுகள் பற்றி நாம் அறிவோம். ஆனால், மாத்திரைகள் போல வலி நிவாரணிகளாக செயல்படும் உணவு வகைகள் பற்றி தெரியுமா?
வலி நிவாரண மாத்திரைகளை போல் இவை உடனடியாக செயல்படாமல், ஒரு வாரம் வரை தொடர்ந்து பின்பற்றினால், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல், வலிகளை பறந்து போக செய்கின்றன. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
அன்னாசி: கால் வலி மற்றும் மூட்டு வலிக்கு மிகச் சிறந்த நிவாரணி. உணவுக்குப் பின் இதை சாப்பிட விரைவில் ஜீரணமாகும்.
ஆப்பிள்: உடல் வலிக்கு ஏற்றது. பழமாகவோ, ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
காபி: உடல் வலியை நீக்கும். தலைவலியை உடனடியாக குறைக்கும்.
ஆரஞ்சு: 'ருமட்டாய்டு' எனப்படும் மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.
திராட்சை: முதுகில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முதுகு வலிக்கு எளிய தீர்வு தரும்.
கிராம்பு: பல் மற்றும் ஈறு வலிக்கு ஏற்றது.
இஞ்சி: உணவால் ஏற்படும் ஒவ்வாமையை சரிசெய்யும். மாதவிலக்கு வலிக்கு மிகவும் உகந்தது. கர்ப்பிணிகள் எலுமிச்சையோடு கலந்து குடிக்கலாம்.
சாலமன் மீன்: மூட்டு, கழுத்து மற்றும் முதுகு வலிகளுக்கு சிறந்தது. இதில், அதிகளவு ஒமேகா - 3 கொழுப்பும் உள்ளது.
மஞ்சள்: தசை வலிகளுக்கு நிவாரணம் தரும். இது ஒரு ஆன்டி கேன்சரும் கூட. தவறாமல் சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழம்: பொட்டாஷியம் குறைபாட்டால் தான், கால் வலி வரும். தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட, கால் வலி சரியாகும்.
செர்ரி: இது ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் பழம். கேன்சர் வராமல் தடுக்கும். சிறந்த வலி நிவாரணியும் கூட.