/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி
/
நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி
PUBLISHED ON : மார் 19, 2025

'மில்க் புரூட்' என, அழைக்கப்படும் பால் பழம் சாகுபடி குறித்து,செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில்,'மில்க் புரூட்' என, அழைக்கப்படும் பால் பழ மரம் சாகுபடி செய்துள்ளேன். இது, பாலில் இருக்கும் அனைத்துவித சத்துகளும் நிறைந்துள்ளன.
இந்த பழச்செடிகளை தென்மாவட்டங்களான நாகர் கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக சாகுபடிசெய்யப்படுகிறது.
இந்த பழங்கள் உருளை வடிவில் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலும், பழங்களாக மாறும் போது வெளிர் நிறத்தில் மாறும். இந்த பழத்தின் சுவை ஒரு நுங்கு பாலில் போட்டு நினைத்தால், எப்படி இருக்குமோ அதே சுவையுடன் இருக்கும்.
இந்த பழங்கள், சீசனில் அதிகமாகவும், சீசன் இல்லாத நேரங்களில் குறைவாகவும் மகசூல் கொடுக்கும்.
இந்த பழங்களில், அதிக புரதச்சத்து நிறைந்து இருப்பதால், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
89391 88682.