/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்று 'கோமுல்' தேர்தல் 12 பதவிக்கு 29 பேர் போட்டி
/
இன்று 'கோமுல்' தேர்தல் 12 பதவிக்கு 29 பேர் போட்டி
ADDED : ஜூன் 25, 2025 12:03 AM
கோலார்: 'கோமுல்' எனும் கோலார் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தின் 12 இயக்குநர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. இதற்காக 29 பேர் களத்தில் உள்ளனர்.
கோலார் அரசு மகளிர் முதல்நிலைக் கல்லுாரியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4:00 மணி வரை நடக்கிறது. மாலையே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஆறு தாலுகாக்களில் ஓட்டுரிமைப் பெற்ற வாக்காளர்கள்:
கோலார்: கோலாரின் கிழக்கில் 73 பேர், தென் மேற்கில் 76 பேர், வேம்கலில் 82 பேர்.
முல்பாகல்: முல்பாகலின் கிழக்கில் 87 பேர், மேற்கில் 73 பேர்.
மாலுார்: கசபாவில் 62 பேர்.
சீனிவாசப்பூர்: அட்டக்கல் 84 பேர், எல்லடூரில் 84 பேர்.
பங்கார்பேட்டை: 54 பேர்.
தங்கவயல்: 60 பேர்.
கோலார் மகளிர் இடஒதுக்கீடு: வடக்கில் 64 பேர், தெற்கில் 56 பேர் என, மொத்தம் 855 பேர் ஓட்டு உரிமை பெற்றவர்கள்.
இவர்களில் பெரும்பாலானோரை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, சில வேட்பாளர்கள், 'ஹைஜாக்' செய்துவிட்டனர்.
கோவில்கள், சுற்றுலா தலங்கள் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் ஓட்டுப்பதிவுக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவர் என கூறப்படுகிறது.