/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எனக்கு தெரியாமலே ஒதுக்கீடு பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்
/
எனக்கு தெரியாமலே ஒதுக்கீடு பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்
எனக்கு தெரியாமலே ஒதுக்கீடு பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்
எனக்கு தெரியாமலே ஒதுக்கீடு பா.ஜ., - எம்.எல்.ஏ., பகீர்
ADDED : ஜூன் 25, 2025 08:44 AM

கதக் : “எனக்கு தெரியாமல் 150 வீடுகளை, பயனாளிகளுக்கு வீட்டு வசதி துறை ஒதுக்கி உள்ளது,” என, சிரஹட்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி கூறி உள்ளார்.
கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் சிரஹட்டி தொகுதிக்கு உட்பட்ட கொஞ்சிகேரி கிராமத்தில், 'பசவா' திட்டத்தின் கீழ் வீட்டு வசதித் துறை 150 வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கி உள்ளது. வீடுகளுக்கு ஒதுக்கும்படி அமைச்சருக்கு, நான் பரிந்துரை கடிதம் எழுதவில்லை. எனக்கே தெரியாமல் 150 வீடுகளை ஒதுக்கி, பயனாளிகளிடம் இருந்து வீட்டு வசதி அதிகாரிகள் பணம் வாங்கி உள்ளனர்.
இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், வீட்டு வசதித் துறை நிர்வாக இயக்குநரை சந்தித்து, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அமைச்சர் அலுவலகத்தில் இதுபோன்ற வேலை நடப்பது துரதிர்ஷ்டவசமானது.
மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். வீடுகளை ஒதுக்க எம்.எல்.ஏ.,வின் பரிந்துரை கடிதம் கட்டாயம். 150 வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு பற்றி, அமைச்சர் ஜமீர் அகமது கான் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.