/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயிலில் கஞ்சா கடத்திய மூவர் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்திய மூவர் கைது
ADDED : மார் 26, 2025 12:29 AM

அண்ணாநகர், ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வட மாநிலத்தில் இருந்து ரயில் வாயிலாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக அண்ணா நகர் மதுவிலக்கு போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற மூன்று பேரிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. தொடர் விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், 25 மற்றும் லத்தீப், 35 ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமந்தா கப்தா, 24 என தெரிய வந்தது.
இவர்கள் ஒடிசா மாநிலத்தில் பெயிண்டிங் வேலைக்கு சென்று விட்டு திரும்பும் போது அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.