கூட்டுமுயற்சியில் பாக்ஸ்கான் - எச்.சி.எல். செமிகண்டக்டர் ஆலை
கூட்டுமுயற்சியில் பாக்ஸ்கான் - எச்.சி.எல். செமிகண்டக்டர் ஆலை
ADDED : ஜன 18, 2024 11:29 PM

புதுடில்லி:இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்காக, 'பாக்ஸ்கான்' நிறுவனம், எச்.சி.எல்., குழுமத்துடன் கூட்டு சேர உள்ளது.
தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும், எச்.சி.எல்., குழுமமும், இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான அசெம்பளி மற்றும் சோதனை ஆலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்கள் கூட்டுமுயற்சியில் ஈடுபட உள்ளன.
இந்த ஆலையை அமைப்பதற்கு, பாக்ஸ்கான் இந்தியா நிறுவனம், கிட்டத்தட்ட 308 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், எச்.சி.எல்., தரப்பிலான முதலீடு மற்றும் இந்த ஆலை அமைய இருக்கும் இடம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, பாகஸ்கான் நிறுவனம், செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலை அமைப்பதற்காக, 'வேதாந்தா' நிறுவனத்துடன் கூட்டுமுயற்சி மேற்கொள்வதாக இருந்து, பின்னர் அதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

