தொழில் பூங்கா மாசு தடுக்க சிங்கப்பூர் - சிப்காட் கூட்டு
தொழில் பூங்கா மாசு தடுக்க சிங்கப்பூர் - சிப்காட் கூட்டு
ADDED : ஜூன் 26, 2025 01:07 AM

சென்னை:சென்னையை சுற்றியுள்ள 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில், 'நெட் ஜீரோ' எனப்படும் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் திட்டங்களை, சிங்கப்பூர் அரசுடன் இணைந்து, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் வடகால், திருமுடிவாக்கம், நெமிலியிலும்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை, மாநல்லுார், மப்பேட்டிலும், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காக்கள் உள்ளன.
இங்குள்ள தொழிற்சாலைகளில் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் நேற்று, தொழில்துறை அமைச்சர் ராஜா உடன் சிங்கப்பூர் துாதரக அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதன் தொடர்ச்சியாக, கார்பன் வெளியேற்றத்தை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை சிங்கப்பூர் அரசு வழங்க உள்ளது.