ADDED : செப் 26, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த ஆகஸ்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, 39 சதவீதம் அதிகரித்து இருந்ததாக ஐ.சி.இ.ஏ., எனும் இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2024 ஆகஸ்டில் 9,265 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆகஸ்டில் 13,464 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
ஆகஸ்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சரிந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ள ஐ.சி.இ.ஏ., ஏற்றுமதி தரவை ஒப்பிடுகையில், முந்தைய மாதத்தோடு ஒப்பிடுவது தவறாக வழிநடத்தும் என எச்சரித்து உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உ ள்ளது.