/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அரிய தாதுக்கள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் எச்.சி.எல்.,
/
அரிய தாதுக்கள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் எச்.சி.எல்.,
அரிய தாதுக்கள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் எச்.சி.எல்.,
அரிய தாதுக்கள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் எச்.சி.எல்.,
ADDED : ஜூன் 25, 2025 12:31 AM

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர், அரிய தாதுக்கள் தொடர்பான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வரை காப்பர் தொடர்பான ஏலங்களில் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், வணிகத்தை விரிவுபடுத்தும் விதமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் சஞ்சீவ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சக பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் கெயில் உடன் விரைவில் நிபந்தனையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம், மினிரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.