ADDED : ஜூன் 24, 2025 09:54 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தச்சநாட்டுகரை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரின் மகள் ஆசிர்நந்தா, 14. ஸ்ரீகிருஷ்ணபுரம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த ஆசிர்நந்தாவை, மாலை, 6:00 மணிக்கு டியூஷனுக்கு அழைத்துச் செல்வதற்காக, அருகில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் சிறுமி சென்றுள்ளார். மாடியில் உள்ள படுக்கையறைக்கு சென்று பார்த்த போது, ஆசிர்நந்தா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
அங்கிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நாட்டுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.