கடைகளில் பெயர் பலகைகள் மாநகராட்சி கடும் எச்சரிக்கை
கடைகளில் பெயர் பலகைகள் மாநகராட்சி கடும் எச்சரிக்கை
ADDED : மார் 27, 2025 08:47 PM
பகர்கஞ்ச்:மாநகராட்சியின் வெளிப்புற விளம்பரக் கொள்கையின்படி, கடைகளில் பெயர் பலகைகளை அவற்றின் உரிமையாளர்கள் அமைக்க வேண்டுமென, என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட வெளிப்புற விளம்பரக் கொள்கையின்படி பெயர் பலகைகளை கடை உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:
* கடையின் நீளத்தை விட, பெயர் பலகை நீளமாக இருக்கக்கூடாது
* 2.5 ச.மீ., மிகாமல் இருக்க வேண்டும்
* கூடுதலாக இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும்
* 12 மீ., குறைவான தெருக்கள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் இருந்தால் ஒளிரும் பெயர் பலகை வைக்க தடை
* மரங்கள் அல்லது புதர்களில் பெயர் பலகை, விளம்பர பலகை வைக்க தடை
* அரசு சார்ந்த கட்டுமானங்களில் விளம்பரங்கள் செய்யவோ ஒட்டவோ தடை
* பாதசாரிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வைக்கக்கூடாது
* வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைக்க தடை.
இதுபோன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வகுத்துள்ளது.
மாநகராட்சியின் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பை கான் சந்தை, கன்னாட் பிளேஸ், பெங்காலி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர்.
எனினும் கடை பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கடை உரிமையாளர்களுக்கு எந்த காலக்கெடுவையும் மாநகராட்சி நிர்ணயிக்கவில்லை என்று ஒரு கடை உரிமையாளர் கூறினார்.