ADDED : மார் 25, 2025 09:01 PM
ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி 2,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்கு 3,227 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த இளஞ்சிவப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். மேலும் அர்ப்பணிப்புள்ள பெண் பட்டாலியன்கள் உருவாக்கப்படுவர். பெண் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மத்திய அரசுடம் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
அதேபோல, 'சாகி நிவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவியர் பாதுகாப்பாக தங்குவதற்கு இரண்டு மகளிர் விடுதிகள் கட்டப்படும்.
இந்த விடுதிகளில் குழந்தை பராமரிப்பு வசதிகளும் செய்யப்படும். டில்லியில் தற்போது, 14 பணிபுரியும் பெண்கள் விடுதிகள் உள்ளன. மேலும் இரண்டு விடுதிகள் கட்டுவதால், கூடுதலாக 1,935 பெண்கள் பயனடைவர்.