பன்மொழித் திறன் மேம்பாட்டுக்கு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பெயரில் 100 மொழி ஆய்வகங்கள் நிறுவப்படும். பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிற மொழிகளில் கல்வி கற்பிக்கப்படும். இந்த திட்டத்துக்கு 21 கோடி ரூபாய் செலவிடப்படும்.
அதேபோல, மாணவர்களிடம் வணிக மனப்பான்மை ஏற்படுத்த தொழில் முனைவோர் சூழல் அமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் புதிய சகாப்தம் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இளம் தொழில்முனைவோருக்கு நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்க ஆதரவு மையங்கள் அமைக்கப்படும். அதேபோல, 50 கோடி ரூபாய் செலவில் 175 கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
டில்லி பட்டு தொழில் முனைவோர் பல்கலைக்கு 230 கோடி ரூபாய், நேதாஜி சுபாஸ் தொழில் நுட்ப பல்கலைக்கு 57 கோடி ரூபாய், டில்லி தொழில்நுட்ப பல்கலைக்கு 42 கோடி ரூபாய், தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு 68 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.