
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றத்தை தணிக்க,
அமைதி பேச்சு முன்னெடுப்பை இந்தியா மேற்கொள்ள வேண்டும். நம் வெளியுறவு
அமைச்சகம் இதை செயல்படுத்த வேண்டும். வெளி விவகாரங்கள் குறித்து பேச எனக்கு
அதிகாரம் இல்லை; இந்த உலகின் அக்கறையுள்ள நபராக, இது என் தனிப்பட்ட
கருத்து.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்கிரஸ்
சமரசம் இல்லை!
வானிலை மாற்றங்களால், சார்தாம் யாத்திரைக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனினும், பக்தர்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது. ஹெலிகாப்டர் இயக்குவதில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக பைலட்கள் தெரிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயல்கிறோம்.
ராம் மோகன் நாயுடு
மத்திய அமைச்சர்,
தெலுங்கு தேசம்
சண்டை கூடாது!
வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதிகளில் மாட்டிறைச்சி வீசும் செயலை நிறுத்த வேண்டும். இதற்கு எதிர்வினையாக, பன்றி இறைச்சியை சிலர் வீசக்கூடும். இதுபோல் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும். கோவில்கள், மசூதிகள் உள்ளிட்டவை துாய்மையான பகுதிகள். இந்த இடங்கள், சைவமாக இருக்க வேண்டும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர்,
பா.ஜ.,