ADDED : ஜூன் 24, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், 81, டில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரான, அந்த மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நான்கு நாட்களுக்கு முன், டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான, உடல் நல சோதனை என்றில்லாமல், உடல் உபாதை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவரின் உடல் நிலை ஸ்திரமாக இருக்கிறது என மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.