ADDED : ஜூன் 25, 2025 04:57 AM

புதுடில்லி: ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், 500 கி.மீ., வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இல்லை. அதே நேரம் 500 கி.மீ.,க்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.
'ஏசி' அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, 500 கி.மீ., மேலான பயணத்தில், 1 கி.மீ.,க்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு, கட்டணம் உயர்த்தப்படுகிறது.
உதாரணத்துக்கு, 1,000 கி.மீ., பயணத்திற்கான டிக்கெட் கட்டணம், முன்னர் இருந்ததை, 10 ரூபாய் அதிகரிக்கும்.
அதே போல், 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போருக்கு, 500 கி.மீ.,க்கு மேல், 1 கி.மீ.,க்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிறிதளவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், பயணியருக்கு பெரிதாக சிரமம் இருக்காது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.