UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 06:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சத்யா, 62. இவர், பி.எம்.டபுள்யூ., ஆட்டோ மொபைல் விருது அதிர்ஷ்டசாலியாக தேர்வாகி உள்ளதாகவும், அதற்கு, 4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் பரிசாக கிடைக்கும் என்றும், இ - மெயில் வந்தது.நம்பிய சத்யா, அந்த மெயிலில் வந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பரிசு கூப்பனை, பணமாக பெற கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதை நம்பிய அவர், 2021 முதல், பல தவணைகளில், 33 லட்சத்து, 14 ஆயிரத்து, 642 ரூபாயை அனுப்பினார்.ஆனால், அவர்கள் கூறியபடி, சத்யாவிற்கு பணம் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, வேலுார் மாவட்ட சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.