UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:51 AM

திருப்பூர்:
அம்மா உணவகம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒன்பது இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.
நல்லுார் மண்டல அலுவலக வளாகம் அருகேயுள்ள அம்மா உணவகத்தில், நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். ஊழியர் வருகைப் பதிவேடு, பொருட்கள் விற்பனை மற்றும் உணவு விற்பனை பதிவேடுகளை அவர் ஆய்வு செய்து, உணவையும் ருசி பார்த்தார்.
திருப்பூர், போயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த கமிஷனர், மாணவர்களுடன் அமர்ந்து, திட்டத்தில் வழங்கப்படும் சிற்றுண்டியை ருசித்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்களையும் கமிஷனர் ஆய்வு செய்தார்.