UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:21 AM

கல்வியில் இந்திய மொழிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22 ஆயிரம் புத்தகங்களை உருவாக்கும் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., துவக்கியுள்ளது.
யு.ஜி.சி., மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர் அதிகாரம் கொண்ட குழுவான 'பாரதீய பாஷா சமிதி' ஆகியவற்றின் கூட்டு முயற்சியே, 'அஸ்மிதா' எனும் 'மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்து வாயிலாக இந்திய மொழிகளில் கல்வி வளங்களை பெருக்குதல்' திட்டம்.
''தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் விரிவான கல்வி வளங்களை உருவாக்கவும், மொழியியல் பிளவைக் குறைக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும், இளைஞர்களை சமூகப் பொறுப்புள்ள உலகளாவிய குடிமக்களாக மாற்றவும் உதவும் இந்த முயற்சி உதவும்" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் தெரிவித்துள்ளார்.

