டாக்டர்கள் பற்றாக்குறை; சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்கள்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டாக்டர்கள் பற்றாக்குறை; சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்கள்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
UPDATED : டிச 23, 2024 12:00 AM
ADDED : டிச 23, 2024 05:48 PM

புதுடில்லி:
நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்பக் கோரி, லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி,.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு இன்று (டிச.,23) விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
* மருத்துவப் படிப்புக்கு கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு, காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
* காலியாக இருக்கும் என்.ஆர்.ஐ., இடங்களைக் கூட பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் நிரப்பலாம்.
* மாநில நிர்வாக கவுன்சிலிங் இன்றி, நேரடியாக மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்பக் கூடாது.
* காலியாக உள்ள மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப, டிசம்பர் 30ம் தேதிக்குள் சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.