அடுத்து என்ன..? இந்தியா - பாகிஸ்தானில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு
அடுத்து என்ன..? இந்தியா - பாகிஸ்தானில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு
ADDED : ஏப் 25, 2025 07:42 AM

* பஹல்காம் தாக்குதலில்ல அப்பாவி மக்கள் 26 பேரை கொன்றுக் குவித்த பாகிஸ் தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. 2019ல் இந்தியா பாலக்கோட்டில் அதிகாலையில் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. அதுபோன்று மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் பாகிஸ்தான் பயந்து நடுங்கியுள்ளது.
* இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கண்காணித்து வரும் பாக்., நிர்வாகம், ராணுவ அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. பாக்., நகரங்களில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பழமைவாதிகளை வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
* இரு நாடுகளிலும், போர் மேகங்கள் சூழ ஒவ்வொரு நொடியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
* போருக்கு ஆயத்தமாக இந்திய விமானப்படை ராபேல், சுகோய் -30 உள்ளிட்ட போர் விமான குழுக்களை உள்ளடக்கி, 'ஆக்ரமன்' எனும் போர் பயிற்சியை நேற்று துவங்கியது.
* அம்பாலா மற்றும் மேற்கு வங் கத்தின் ஹாஷிமாரா விமான படை தளங்களில் இருந்து வந்துள்ள விமானப்படை வீரர்கள் தரைவழி தாக்குதல் மற்றும் மின்னணு போர் நுணுக்கங்கள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.
* பாகிஸ்தானியர் வெளியேற இந்தியா கெடு விதித்த நிலையில், 28 பாகிஸ்தானியர் திருப்பி அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து 105 இந்தியர் நேற்று நாடு திரும்பினர்.
* இரு நாடுகளுக்கு இடையே அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடிகளில் நுழைவு வாயில்கள் இழுத்து மூடப்பட்டன.
* பாகிஸ்தான் வான்பரப்பில், இந்திய விமானங்கள் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களை, விரிவுப்படுத்தப்பட்ட மாற்றுப்பாதையில் இயக்க, ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
* பாகிஸ்தானுக்கு எதிராக, பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பிரதமர் மோடியிடம், காஷ்மீர் தாக்குதல் குறித்து போனில் விசாரித்தார். பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு தனது ஆதரவை அறிவித்தார்.
* இந்தியா-பாக்., இடையே, கடந்த 1972ம் ஆண்டில் கையெழுத்தான சிம்லா அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
* இந்தியா பாகிஸ்தான் எல்லை பஞ்சாப் பெரோஸ்புர் பகுதியில் தவறுதலாக நுழைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங் என்பவரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.