/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது
/
கஞ்சா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 26, 2025 12:36 AM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவ கல்லுாரி அருகே சார்காசிமேடு சாலையில் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும், கிருமாம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி, 28; காரைக்கால் பெரிய பேட் கார்த்திகேயன், 24; குடியிருப்புபாளையம் சிவக்குமார் மகன் செழி, 26, ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.