/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்க ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
/
பணி நீக்க ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
ADDED : ஜூன் 26, 2025 12:40 AM

புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று 2வது நாளாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட காமராஜர் சாலை வழியாக போராட்டக்குழு தலைவர் தெய்வீகன் தலைமையில் எருமைமாடு போஸ்டருடன் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, திடீரென காமராஜர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பெரியக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக நேரு வீதி, மிஷன் வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றவர்களை, போலீசார் ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே பேரிகார்டு போட்டு தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.