/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 சவரன் நகை, ஐபோன் திருட்டு: பெண்ணுக்கு போலீஸ் வலை
/
5 சவரன் நகை, ஐபோன் திருட்டு: பெண்ணுக்கு போலீஸ் வலை
5 சவரன் நகை, ஐபோன் திருட்டு: பெண்ணுக்கு போலீஸ் வலை
5 சவரன் நகை, ஐபோன் திருட்டு: பெண்ணுக்கு போலீஸ் வலை
ADDED : மார் 26, 2025 03:49 AM
புதுச்சேரி, : அரியாங்குப்பம், கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ், 25; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி அரியாங்குப்பம் டோல்கேட் அருகே உள்ள மதுபான கடை எதிரே நின்றிருந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரிடம் வந்து பேசினார்.
அதில், தனது கணவர் தற்போது மருத்துவனையில் உள்ளதாகவும், எனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், மது வாங்கி கொடுத்தால்நாம் சந்தோஷமாக இருக்கலாம் என, கூறினார்.
இதையடுத்து, பிரகாஷ்ராஜ் மதுபானம் வாங்கி கொண்டு, அந்த பெண்ணுடன் உருளையன்பேட்டை ஜே.வி.எஸ் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று அறை எடுத்து தாங்கினார்.
அங்கு, இருவரும் மது அருந்தியபோது,பிரகாஷ்ராஜ் மதுபோதையில் மயங்கிய நிலையில், அடையாளம் தெரியாத அப்பெண், அவர் அணிந்திருந்த செயின், குர்மாத், மோதிரம் உள்ளிட்ட 5 சவரன் நகை மற்றும் ஐபோனை திருடி கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.