/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை
/
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 26, 2025 03:50 AM
புதுச்சேரி : சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில் 100 அடி ரோடு, இந்திரா சிக்னல் அருகில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.
100 அடி சாலையில் இருபுறமும் அமைந்துள்ள இணைப்பு சாலைகளில் வணிகம் செய்கின்ற வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் இந்த சாலை வழியாக செல்லும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை உடனடியாக அரசு சரிசெய்ய வேண்டும்.
நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் அனைத்து நேரத்திலும் வருகின்றன. இதனை முறைப்படுத்த உரிய நேரத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.