/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்துறை அமைச்சருக்கு முத்தம் 'வருங்கால முதல்வர்' என கோஷம்
/
உள்துறை அமைச்சருக்கு முத்தம் 'வருங்கால முதல்வர்' என கோஷம்
உள்துறை அமைச்சருக்கு முத்தம் 'வருங்கால முதல்வர்' என கோஷம்
உள்துறை அமைச்சருக்கு முத்தம் 'வருங்கால முதல்வர்' என கோஷம்
ADDED : ஜன 14, 2024 03:54 AM

புதுச்சேரி போலீசில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஏட்டு, 15 ஆண்டுகள் பணியாற்றிவர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர், 25 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
போலீசாரை தொடர்ந்து, ஐ.ஆர்.பி.என்., போலீசாரும், இதே போல பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்தனர். கவர்னர் ஒப்புதல் பெற்று, மறுநாளே ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கும் 10, 15, 25 ஆண்டு பதவி உயர்வுக்கான ஆணை வெளியிடப்பட்டது. இதனால், தற்போது பணியில் உள்ள 800 ஐ.ஆர்.பி.என்., போலீசார் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.பதவி உயர்வு பெற்ற ஐ.ஆர்.பி.என்., போலீசார், வி.மணவெளியில் உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வீட்டிற்கு நேற்று காலை சென்றனர். அங்கு, அமைச்சருக்கு ஆள் உயர மாலை அணிவித்து, காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.
தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயத்தை ஐ.ஆர்.பி.என்., காவலர்கள் தோளில் துாக்கி வைத்து, இந்தியாவில் எந்த அமைச்சராலும் செய்ய முடியாததை ஒரே நாளில் செய்து முடித்த 'புரட்சி முதல்வர்', 'வருங்கால முதல்வர்' என கோஷம் எழுப்பினர்.
அப்போது, ஐ.ஆர்.பி.என்., காவலர் ஒருவர், அமைச்சர் நமச்சிவாயத்தை கட்டி பிடித்து முத்தமிட்டார். அதை அமைச்சரும் தட்டி கழிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

