sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

/

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்களின் அடுத்த நிலைகளான பர்ஷவோத்தான ஆசனம், இடைப்பட்ட நிலை, பாதோத்தான ஆசனம், அர்த சந்திர ஆசனங்களின் செயல்முறைகளை இந்த வாரம் பார்ப்போம்.

பர்ஷவோத்தான ஆசனம்


சமஸ்திதி நிலையில் நின்று, மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து, முடிந்த அளவிற்கு கால்களை அகலப்படுத்தி, கைகளை தோள்பட்டை அளவிற்கு நீட்டிய நிலையில் இருக்கவும். மூச்சை உள்ளடக்கி வலது கால் மற்றும் தலையை வலப்பக்கம் திருப்பி, இடது கால் நேராக இருக்க வேண்டும். உடலையும், கைகளையும் ஒரே நேரம் வலது பக்கம் திருப்பி, பின்பக்கமாக இரு கைகளையும் முட்டியில் பிடித்து இணைக்கவும். தலையை பின்புறம் வளைத்து, மூச்சை வெளியேற்றியபடி, முன்னோக்கி குனித்து தலையை கால் முட்டியில் தொடும்படி கொண்டு வரவும். முட்டியை மடிக்காமல் நேராக வைக்க வேண்டும்.

பத்து எண்ணும் வரை இதே நிலையில் நின்ற பின் மூச்சை உள்ளிழுத்து மேலே வரவும். கைகளை தோள் அளவிற்கு நீட்டவும். மூச்சை உள்ளடக்கி கால்களை நேராக கொண்டு வந்து நிற்கவும். இதேபோல் மறுபக்கமும் செய்ய வேண்டும். சமஸ்திதி நிலைக்கு திரும்பி சிறிது ஓய்வு எடுத்தபின், இன்னும் இருமுறை இடது மற்றும் வலதுபுறங்களில் செய்யவும்.

இடைப்பட்ட நிலை


சமஸ்திதியில் இருந்து மூச்சை வெளியிட்டபடி குதித்து முடிந்த அளவிற்கு கால்களை அகலப்படுத்தவும். கைகளை நீட்டியபடி தோள் அளவிற்கு துாக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் முடிந்த அளவு நீட்டி துாக்க வேண்டும்.

பாதோத்தான ஆசனம்


கைகள் தலைக்கு மேல் நீட்டிய நிலையில் இருந்து மூச்சை வெளியிடப்படி முன்னால் குனியவும். கைகளை கால்களுக்கு நடுவே ஒரே கோட்டிலுள்ளது போல் முழுவதும் கீழே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து தலையை துாக்கவும். முதுகையும், முதுகுத்தண்டையும் முடிந்த அளவு நீட்டியபடி மூச்சை வெளியிட்டு, தலை தரையைத் தொடும்படி குனியவும். தலை, கை, கால் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். கால்கள் எவ்வளவு அகலமாக உள்ளதோ அவ்வளவு நல்லது. பத்து எண்ணிக்கையில் இருந்து, பின் மூச்சை உள்ளிழுத்து உடலை கைகளுடன் மேலே துாக்கி, மூச்சை வெளியிட்டுவிட்டு குதித்து சமஸ்திதி நிலைக்கு திரும்பவும். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் இருமுறை திரும்பச் செய்யவும்.

அர்த சந்திர ஆசனம்


சமஸ்திதி நிலையில் மூச்சை உள்ளிழுத்து குதித்து கால்களை அகலப்படுத்தி, கைகளை தோள்பட்டை அளவிற்கு நீட்டவும்.

மூச்சை உள்ளிழுத்து தலையையும், வலது காலையும் வலப்பக்கம் திருப்பி, மூச்சை வெளியிட்டு வலது முட்டியை மடக்கி வீராசனத்தில் செய்தது போல் மூச்சை வெளியிட்டுக் கொண்டே குனிந்து, வலது கையை வலது காலுக்கு முன் தரையில் வைக்கவும். உடலை சமநிலைப்படுத்தி, உள்மூச்சில் இடது காலை பின்புறம் துாக்கி, இடது கையை முன்புறம் துாக்கி, நீட்டிய நிலையில் நிற்கவும். தரையில் பதித்த காலை முட்டி மடியாமல் நீட்டிய வண்ணம் இருக்க வேண்டும்.

10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்று, பின் இடது காலை கீழே இறக்கவும். வீராசன நிலைக்கு முட்டியை மடக்கி திரும்பவும் உள்மூச்சில் எழுந்து நின்று தலையையும், வலது காலையும் நேராகத் திருப்பவும். இதனை இடது பக்கமும் செய்யவும். சமஸ்திதி நிலையில் இரு பக்கமும் முடித்த பின் ஓய்வெடுத்து, மறுபடியும் இருமுறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

பிற நிலை ஆசனங்கள் அடுத்த வாரம்...

ஆசனங்களும், பலன்களும்

பர்ஷவோத்தான ஆசனம் உடல் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது. கால்கள் மற்றும் மையப் பகுதியை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. பாதோத்தான ஆசனம் கால்களை வலுப்படுத்துகிறது. இடுப்பு தளர்வை மேம்படுத்துகிறது. இடுப்பில் இருந்து தலைப்பகுதி வரை ரத்த ஓட்டம் சீராக செயல்பட உதவும் அர்த்த சந்திராசனம் கால்கள் மையப்பகுதி மற்றும் இடுப்புகளை வலுப்படுத்துகிறது. தொடை எலும்புகள், தோல்கள் மற்றும் மார்பை விரிவுப்படுத்துகிறது. மாதவிடாய் அசவுகரியத்தை நீக்குகிறது.






    • Dinamalar Events


    Dinamalar