ADDED : ஜூலை 22, 2026 03:19 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகில் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்., தலைவி நிஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டில்லியில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்.
இந்தியாவின் கல்வித்துறை சந்தித்து வரும் கடுமையான நெருக்கடி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
