ADDED : ஜூலை 22, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பயிற்சி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணைய தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.
மகளிர் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஜெயப்ரியா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், போக்சோ சட்டம், வழக்கு பதிவு செய்யும் முறை, விசாரணை செயல்முறைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பேசினார்.
வழக்கறிஞர்கள் ரீனா ஐஸ்வர்யா, ரவி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
