/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கதிர்காமம் தொகுதியில் தி.மு.க., மூப்பெரும் விழா
/
கதிர்காமம் தொகுதியில் தி.மு.க., மூப்பெரும் விழா
ADDED : செப் 25, 2025 11:31 PM

வில்லியனுார்:கதிர்காமம் தொகுதி தி.மு.க., சார்பில் கருணாநிதி சிலை திறப்பு, நுாலகம் மற்றும் தி.மு.க., தொகுதி அலுவலகம் திறப்பு என முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு புதுச்சேரி தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கதிர்காமம் தொகுதி தி.மு.க செயலாளர் வடிவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி பங்கேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில நிர்வாகிகள் மூர்த்தி,நந்தா சரவணன்,குமார்,தைரியநாதன்,கோபால், கார்த்திகேயன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கதிர்காமம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், கண்ணபிரான்,சரவணன், அன்பு, ரமேஷ், சத்யகுமார், கதிரவன், உமேஷ், இசைமணி, டேவிட்ராஜ், வள்ளல் பிரபு, ஆனந்த பாஸ்கரன், நசீர், கார்த்திகேயன், கருணாகரன், அண்ணாதுரை, ஜெய சுமதி, சுரேஷ், பத்மநாபன், ஆறுமுகம், செந்தில்குமார், கலியபெருமாள், ராம்குமார், சிவகுமார், இப்ராஹிம், சீனு, சிவ முருகன், ராஜா, சுகுணா, பத்மநாபன், சிவபெருமாள், ஜனனி, முருகன், அருணாசலம், ராமதாஸ், முகமது, பாபு, மார்க், நாகப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.