/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை 13 இடங்களில் சிறப்பு முகாம்
/
சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை 13 இடங்களில் சிறப்பு முகாம்
சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை 13 இடங்களில் சிறப்பு முகாம்
சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை 13 இடங்களில் சிறப்பு முகாம்
ADDED : செப் 26, 2025 04:46 AM
புதுச்சேரி: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்து, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை (27ம் தேதி ) சிறப்பு முகாம் நடக்கிறது.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன்வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஒரு கிலோ வாட்ஸ்க்கு ரூ. 30 ஆயிரம், 2 கிலோ வாட்ஸ்க்கு ரூ. 60 ஆயிரம், 3 கிலோ வாட்ஸ்க்கு ரூ. 78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் சூரிய மின் நிலையம் அமைப்பதின் மூலம், மின் கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும். சூரிய மின் நிலையத்தில் இருந்து 3 கிலோ வாட்ஸ்க்கு 4500 யூனிட் மின்சாரத்தை பெறலாம். இத்திட்டத்தில் சேரும் நபர்களுக்கு, குறைந்த வட்டியில் 6 சதவீதம் வங்கி கடன் வசதியும், 5 ஆண்டுகள் வரை இலவச பராமரிப்பு செய்யப்படுகிறது.
இத்திட்டம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,நாளை 27 ம் தேதி புதுச்சேரியில் 13 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் நடைபெறும் இடங்கள்: சவரிராயலு வீதியில் உள்ள திரு. வி.க. அரசு உயர்நிலைப்பள்ளி, எல்லைப்பிள்ளைசாவடி என்.டி. மஹால், முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண மண்டபம், ஜவகர் நகர் மின்துறை அலுவலகம், சண்முகாபுரம் தமிழ் திருமண மண்டபம், தருமாபுரி ஆ.சி.ஆ. திருமண மண்டபம், கூடப்பாக்கம் கே.என்.ஆர். திருமண மண்டபம், திருக்கனுார் விஜய் மஹால், திருபுவனை ஸ்ரீகணேஷ் திருமண மண்டபம், முள்ளோடை ராஜேஷ் மஹால், காலாப்பட்டு பல்நோக்கு கூடம், அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம், ஏரிப்பாக்கம் ஏகநாதன் பார்ட்டி ஹால்.ஆகிய இடங்களில், காலை 10 மணி முதல் பகல் 2 மணிவரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.