/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போஸ்டர் ஒட்டியவரை தெரியாதா? அங்காளன் எம்.எல்.ஏ., பாய்ச்சல்
/
போஸ்டர் ஒட்டியவரை தெரியாதா? அங்காளன் எம்.எல்.ஏ., பாய்ச்சல்
போஸ்டர் ஒட்டியவரை தெரியாதா? அங்காளன் எம்.எல்.ஏ., பாய்ச்சல்
போஸ்டர் ஒட்டியவரை தெரியாதா? அங்காளன் எம்.எல்.ஏ., பாய்ச்சல்
ADDED : மார் 26, 2025 03:55 AM
புதுச்சேரி : சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
என்னை அவதுாறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்து சட்டசபை கவனத்திற்கு கொண்டு வந்தேன். சபாநாயகர் உத்தரவிட்ட பிறகு எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். அதுவும் போஸ்டர் யார் ஒட்டியது தெரியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போஸ்டர் ஒட்டப்பட்ட இடங்களில் கேமிராக்கள் உள்ளன. அதை பார்த்தால் யார் என்று தெரியாதா. போஸ்டர் ஒட்டியது யார் என்று உளவு துறைக்கு தெரியாதா. அவர்கள் மீது நேரடியாகவே வழக்குப் பதிவு செய்ய முடியாதா... இப்படி தான் திருபுவனை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.
சாதாரண போஸ்டர் ஒட்டியவர்கள் மீதே போலீசாரால் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை. இவர்கள் எப்படி கஞ்சா பிடித்தால் வழக்குப்பதிவு செய்வார்கள்.
எனக்கெதிராக போஸ்டர் ஒட்டியவர் பூங்கொத்துடன் துறை அமைச்சரை சந்தித்துவிட்டு செல்கிறார். ஆட்சியாளர்கள், குற்றவாளிகளுடன் இருந்தால் எப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கும். அங்குள்ள சப் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்.