/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் நாளை கந்த சஷ்டி துவக்கம்
/
முத்தியால்பேட்டையில் நாளை கந்த சஷ்டி துவக்கம்
ADDED : அக் 20, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், 164ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நாளை(22ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி, தினமும் காலை சிறப்பு அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 26ம் தேதி இரவு 9:00 மணிக்கு வேல் வாங்குதல், 27ம் தேதி மதியம் 2:30 மணிக்கு தாரகா சூரன் புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

